Apr 12, 2010

நட்பில் பிரிவு என்பது ஏது?

இன்னும் சில நாட்களே உள்ளன,கல்லூரியை விட்டு நாம் பிரிவதற்கு என்று என் நண்பர்கள் கூறிகொண்டுஇருக்கிறார்கள்.எது பிரிவு?
நாம் தற்பொழுது பிரிவது உடலால் மட்டுமே அன்றி உணர்வால் அல்ல.

கண்பார்வையிலிருந்து நீ மறைந்தாலும் , இதயத்தில் நீ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய். நமது நினைவுகள் இனிமையான சந்தோஷத்தை தந்துகொண்டேதான் இருக்கின்றன.நாம் சந்திப்பது தற்பொழுது நின்றாலும் எதுவும் இந்த உலகில் நிரந்தரமில்லை.நிச்சயம் நாம் பலமுறை சந்திப்போம். ஏனென்றால் இந்த உலகம் மிகச்சிறியது.சேர்ந்து பழகுவதை விட பிரிந்திருக்கும்போது ஏற்படும் நினைவுகள் நம்முள் ஆழமான நட்பை உருவாக்கும். நட்பு என்றுமே அழியாத ஒன்று.farewell day அன்று நிறைய பேர் அழுவார்கள் என்று நினைக்கிறேன்.ஆனால் நான் அழமாட்டேன்.ஏனெனில் நாம் பிரிந்தாலும் உங்களுடைய நினைவுகளை சுமந்துகொண்டுதான் செல்கிறேன்.அதுபோதும் எனக்கு. என்றும் பிரிய மனமில்லாத நண்பன்.

                                                                                        என்றும் மறவா
                                                                                                  தோழன்
                                                                                                         சிவா.R    

No comments:

Post a Comment