Mar 30, 2010

என் பார்வை நீ













நண்பா ,
      

  என் கண்ணின் கருவிழியாக நீ இருக்கிறாய் ,..

        உன் மூலம் இந்த உலகை நான் ரசிக்கிறேன் .
     




  நீ என்னுடன் இருக்கும்வரை இந்த உலகு எனக்கு அழகு .
     
      என்று நீ என்னை பிரிகிறாயோ அன்று இந்த உலகு எனக்கு வெறுமை.
  
      என் வாழ்வே நீதான் என்றும் என்னை கொன்றுவிடதே,...  

என் நண்பா

Mar 26, 2010

தற்போதைய நட்பின் தேவை

நட்பு
 உலகிலேயே  மிகப்பெரிய உறவு ,வரம்,தன்னம்பிக்கை ,விட்டுகொடுத்தல்,  புரிந்துக்கொள்ளுதல் ..............


குரங்கு இனம் தன் நட்புக்காக எதிரியிடம் போர்புரியும்,உயிர் பிரியும்வரை கூட,,,,,,
அன்பை தவிர வேறு எதையும் எதிர்பார்க்காமல் பழகுவது நட்பு மட்டும்தான்..

அக்காலத்தில் உலகம் முழுவதும் நட்பை வளர்த்து கொள்ளுவது மிகவும் அரிது.(தொழில்நுட்ப வளர்ச்சி அப்படி),..... ஆனால் இக்காலத்தில் உலகில் எவருடன் வேண்டுமானாலும் நட்பை வளர்த்து கொள்ளமுடியும்,...ஆனால் இக்காலத்தில் நட்பு அதிகமானவரிடம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி விடுகிறது
.மாநிலத்தை விட்டு மாநிலத்திற்கே நட்பை ஒரு வெறுப்பாகதான் காட்டுகிறார்கள்..அப்புறம் எப்படி நாட்டுக்கு நாடு நட்பு வளரும்,,

கர்ணன் ,துரியோதனன் வாழ்ந்தது உண்மையோ ,பொய்யோ ஆனால் அவர்களின் நட்பை பற்றி புராணத்தில் படித்தால் நட்பு என்பது என்ன என்று புரியும் ,,

எவ்வளவோ அன்பான நண்பனாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலம் நாம் அவர்களை பிரிந்து இருக்கும் போது அவர்களின் மீதான அன்பு நம் மனதில் குறைந்துகொண்டு வருகிறது. காரணம் நமக்கு வேறு சில நண்பர்கள் கிடைத்துவிடுவதால் அவர்களோடு நேரத்தை செலவிடுகிறோம். என்றோ ஒரு நாள் அவர்களை பார்க்கும்பொழுது பழைய நினைவுகளை மட்டுமே பேசுவதில் நேரத்தை செலவிடுகிறோம்.


இந்த உலகில் நான் ஆசைபடுவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான் ,,காலத்தால் அழியாத சிறந்த நட்பை என் வாழ்நாளில் அதிகரித்து கொண்டே இருக்கவேண்டும்.. என் நினைவு அவர்களிடமும் ,அவர்கள் நினைவு என்னிடமும் அழியாமல் நினைத்து பார்த்துகொண்டே இருக்கவேண்டும்... நட்பு  என்னும் உறவு நம் வாழ்வில் வந்துவிட்டால்  வாழ்நாள் முழுதும் மறக்ககூடாது,,,

                                                                               என்றும் நட்புடன்
                                                                                              சிவா.R

உலக வாழ்க்கை (மனிதனும்,இயற்கையும்)

இந்த உலகில் தற்பொழுது தன் வாழ்க்கையை முழுவதுமாக நிறைய பேருக்கு அனுபவிக்க தெரியவில்லை(என்னை உட்பட),,,,,      

 பல பேர் பணம்தான் வாழ்க்கை என்று வாழ்கிறார்கள். பணம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம்தான்,.ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது.பணம் என்பது நம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள மட்டுமே..

இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை தற்பொழுது வெறும் கற்பனையாகவே மட்டும் உள்ளது,,அந்த கால மனிதனின் கேற்கும்திறன்,பார்க்கும்திறன்,ஞாபகத்திறன் தற்பொழுது உள்ள மனிதனுக்கு குறைந்துகொண்டே வருகிறது,,


குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கும் மனிதர்களே தற்பொழுது நிறைய இருக்கிறார்கள், தற்பொழுது இந்த உலகம் மிக வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது ,, எப்பொழுது இந்த வேகம் முழுமையாக நிக்கும் என தெரியவில்லை.
இப்போதுஇந்த உலகை மனிதன்தான் ஆட்சி செய்கிறான்,பல இனங்களை வேறேடுத்தான்,பல மரங்களை பெயர்தெடுத்தான்....

நகரங்களில் மரங்கள்,செடிகள்,ஒரு அழகுபொருளாகவும்,அதிசயபொருளாகவும் பார்க்கபடுகிறது.மண்ணை பார்ப்பதற்கு முன் குப்பைதான் நம் கண்ணில் தெரிகிறது .

.நிறைய பேர் இளமை வயதில் சம்பாதிப்பது மட்டுமே குறியாக இருக்கிறார்கள் ,.முதுமை வயதில் வாழ்க்கையை அனுபவிக்க முயல்கிறார்கள்..ஆனால் வயது தடுக்கிறது.மனிதரே பணம் சம்பாரிப்பது மட்டும் அல்லாமல் ,

வாழ்க்கையை அனுபவித்து இயற்கையை காத்து வருங்கால தலைமுறையை வாழவைக்க நம்மால் முடிந்ததை உருவாக்கி வைத்து விட்டு செல்வோம்..

Mar 19, 2010

நட்பு



 தரையில் மீன் துடிக்கும்போது அதை தண்ணீரில் விடும்போது அதற்கு ஏற்படும் நிலைதான் ,,,
எனக்கு நண்பர்களை பிரிந்து சந்திக்கும் போது ,,,,,

 இந்த உறவை உயிரோடு ஒப்பிடுவேன் ,...

என் உயிர் இருக்கும்வரை இந்த உறவு நம்முள் நீடிக்கும் ,,

என் உயிர் பிரிந்த பிறகு இந்த உறவு உன்னுள் துடித்துகொண்டிருக்கும்,...

இந்த நிலையான அன்பை தந்த நண்பர்களுக்கு நன்றி ,,,,

இந்த உலகில் எவரை வேண்டுமானாலும் நண்பராக ஏற்றுக்கொள்ளமுடியும்...
மற்ற எந்த உறவாகவும் ஏற்று கொள்ளவே முடியாது ,,,
நட்பின் சிறப்புக்கு இது ஒன்றே போதும்,,,,

நட்பின் எண்ணம் உன் உள்ளத்தில் இருக்கும்வரை ,உன் எதிரியின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கும்,,,

உலகில் நீ சிறந்த மனிதனாக இருப்பதற்கு நல்ல நட்பை ஏற்றுக்கொள் ,,,,,


                                                                                                          இப்படிக்கு உங்கள்
                                                                                                                          நண்பன்
                                                                                                                                       சிவா.R
                                                                                                              

Mar 18, 2010

வெற்றியின் வீரம்

வெற்றி அதை அடைந்தவரின் செயலை பொறுத்தே நிர்ணயிக்கபடுகிறது,,,,

வெற்றி என்பது வெறும் வார்த்தை மட்டுமே,,,,

நியாயம் , அநியாயம்  இரண்டுமே வெற்றியில் உண்டு......

வெற்றி பாதையில் நீ செல்லும்போது யாருக்கும் துன்பம் கொடுக்காதே ,,,

நீ பெற்ற வெற்றி உன்னைவிட மற்றவரை மகிழ்ச்சி படுத்த வேண்டும்,,

உன் எதிரியிடம் நீ கருணை காட்டுவதுகூட உன் வெற்றிதான் (உன் மனதுக்கு தெரியும்),,,,,,

சுமை



படகின் சுமையை கடல் தாங்குவதுபோல ,என் வாழ்வின் சுமையை என் தன்னம்பிக்கை சுமக்க வேண்டும் ..

படகில் சிறுதுளை விழுந்தால் அடைக்கும் சிறு மரக்கட்டையை போல விடாமுயற்சி என் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்...

நேர்மையுடன் என் வெற்றி எனக்கு மகிழ்ச்சி தரவேண்டும் ,,,,,,,