Apr 12, 2010

நட்பில் பிரிவு என்பது ஏது?

இன்னும் சில நாட்களே உள்ளன,கல்லூரியை விட்டு நாம் பிரிவதற்கு என்று என் நண்பர்கள் கூறிகொண்டுஇருக்கிறார்கள்.எது பிரிவு?
நாம் தற்பொழுது பிரிவது உடலால் மட்டுமே அன்றி உணர்வால் அல்ல.

கண்பார்வையிலிருந்து நீ மறைந்தாலும் , இதயத்தில் நீ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய். நமது நினைவுகள் இனிமையான சந்தோஷத்தை தந்துகொண்டேதான் இருக்கின்றன.நாம் சந்திப்பது தற்பொழுது நின்றாலும் எதுவும் இந்த உலகில் நிரந்தரமில்லை.நிச்சயம் நாம் பலமுறை சந்திப்போம். ஏனென்றால் இந்த உலகம் மிகச்சிறியது.சேர்ந்து பழகுவதை விட பிரிந்திருக்கும்போது ஏற்படும் நினைவுகள் நம்முள் ஆழமான நட்பை உருவாக்கும். நட்பு என்றுமே அழியாத ஒன்று.farewell day அன்று நிறைய பேர் அழுவார்கள் என்று நினைக்கிறேன்.ஆனால் நான் அழமாட்டேன்.ஏனெனில் நாம் பிரிந்தாலும் உங்களுடைய நினைவுகளை சுமந்துகொண்டுதான் செல்கிறேன்.அதுபோதும் எனக்கு. என்றும் பிரிய மனமில்லாத நண்பன்.

                                                                                        என்றும் மறவா
                                                                                                  தோழன்
                                                                                                         சிவா.R    

Apr 9, 2010

நட்பு இருக்கும்வரை என் உயிர்

                                              
                                             நண்பா ,,
இல்லாத மனதையேஉனக்காக உருவாக்கி,
    உன்னை நினைக்கும்போது ,
         உனக்காக துடிப்பதற்கு இதயத்தை தராமலா போய்விடுவேன்?


   என் பாதை உன் வழியில்,
  தடை வந்தாலும் அழைத்து செல்வாய் எனும் நம்பிக்கையில் உன்னுடன்        வருகிறேன்.

கடலின் ஆழம் போல் நம் நட்பின் ஆழமும்,
கடல் அலைபோல் நம் நினைவும் முடிவுறாமல் இருக்கவேண்டும்.

கவலை நமக்கு எதிரியாக வேண்டும்.அதனால் வரும் கண்ணீர் நமக்கு கற்பனை பொருளாக வேண்டும்.

நான் எப்போது இறப்பேன் என்று உனக்கு தெரியும்.
எப்போது நீ என்னை மறக்கிறயோ அன்று!

அதன்பிறகு உயிர் இருந்தாலும் நான் வெறும்கூடுதான்
என்றும் நினைத்திரு ! மறந்து விடாதே!

                                                                              என்றும் மறவா
                                                                                           தோழன்
                                                                                                     சிவா.R

Apr 8, 2010

வினோத் சுயசரிதை


நான் வினோத் .. என்னை மாமா என்று அழைப்பார்கள்.காரணம் அனைவரும் அறிந்ததே.எனது ஊர் சத்தியமங்கலம் அருகில் நால்ரோடு.என் பெற்றோருக்கு நான் ஒரே ஒரு பையன்.அதனால் நான் விடுதியில் இருந்து வாராவாரம் ஊருக்கு சென்றுவிடுவேன்.பேருந்தில் ஏறியசில நிமிடத்தில்சொர்க்கதிற்கே
(துக்கம்)சென்றுவிடுவேன்.. நான் அனைத்து தவறான பழக்கமும் கொண்டவன்.நான் கல்லூரியில் ஒரு பொண்ணை காதலித்தேன். ஆனால் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் எனக்கு தலைமுடி உதிர்தல்,தொப்பை  நினைத்து மட்டும் வருந்துவேன்.என்னுடைய கையெழுத்து நன்றாக இருக்கும்.ஆனால் தலையெழுத்து???
 என் தந்தை எனக்கு எவ்ளோ நாள்தான் தண்டசோறு போடுவர்.அளவுக்கு மீறி சரக்கு அடித்தால் வாந்தி எடுத்து மட்டி ஆகிவிடுவேன்.வண்டியிலிருந்து கீழே விழுந்தாலும் தூங்க விட்டார்கள் என்று அப்படியே படுத்துவிடுவேன்.ஒரு நாள் வெளியபோகவில்லை(பாத்ரூம்) என்று மாத்திரை போட்டு அப்புறம் போனேன்.எங்க அப்பா எல்லாமே வாங்கிதந்தாரு. ஆனால் இந்த மொபைல் மட்டும் புதுசு வாங்கித்தர மாட்டேன்கிறார்.இன்னும் கொஞ்ச நாளில் படிப்புமுடிய போகிறது.அப்புறம் எந்த இளிச்சவாயன் வேலை தருவான் என்று தெரியவில்லை.கிளாஸ் முடிந்த உடன்   நான் ஜட்டி கிட்டி எல்லாத்தையும் அவுத்துவிட்டு கைலி மட்டும்தான்,ஏன்னா சூடு அப்படி...எங்க அப்பாவோட எங்கே போனாலும் அவர் பக்கத்துல போறது இல்லை.ஏன்னா அவர் என்னைவிட யூத்தா இருப்பாரு.. என்ன பண்ணுவது.....சட்டைய மட்டும் மாத்திபோட்டாலும்,பேண்ட மட்டும் மாத்த மாட்டேன்(தற்பொழுது மட்டும் ). ஓகே போதும் அப்புறம் மீட் பண்றேன்.                      


                                                                                                          இப்படிக்கு என்றும்                   
                                                                                                                  மப்புடன்
                                                                                                                     S.வினோத்குமார்B.E