இன்னும் சில நாட்களே உள்ளன,கல்லூரியை விட்டு நாம் பிரிவதற்கு என்று என் நண்பர்கள் கூறிகொண்டுஇருக்கிறார்கள்.எது பிரிவு?
நாம் தற்பொழுது பிரிவது உடலால் மட்டுமே அன்றி உணர்வால் அல்ல.
கண்பார்வையிலிருந்து நீ மறைந்தாலும் , இதயத்தில் நீ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய். நமது நினைவுகள் இனிமையான சந்தோஷத்தை தந்துகொண்டேதான் இருக்கின்றன.நாம் சந்திப்பது தற்பொழுது நின்றாலும் எதுவும் இந்த உலகில் நிரந்தரமில்லை.நிச்சயம் நாம் பலமுறை சந்திப்போம். ஏனென்றால் இந்த உலகம் மிகச்சிறியது.சேர்ந்து பழகுவதை விட பிரிந்திருக்கும்போது ஏற்படும் நினைவுகள் நம்முள் ஆழமான நட்பை உருவாக்கும். நட்பு என்றுமே அழியாத ஒன்று.farewell day அன்று நிறைய பேர் அழுவார்கள் என்று நினைக்கிறேன்.ஆனால் நான் அழமாட்டேன்.ஏனெனில் நாம் பிரிந்தாலும் உங்களுடைய நினைவுகளை சுமந்துகொண்டுதான் செல்கிறேன்.அதுபோதும் எனக்கு. என்றும் பிரிய மனமில்லாத நண்பன்.
என்றும் மறவா
தோழன்
சிவா.R
என் நண்பர்கள் மற்றும் என் வாழ்வின் சில முக்கிய நிகழ்வுகள் ... நானும்,நீங்களும் அறிந்து கொள்ள ,,,
Apr 12, 2010
Apr 9, 2010
நட்பு இருக்கும்வரை என் உயிர்
நண்பா ,,
இல்லாத மனதையேஉனக்காக உருவாக்கி,
உன்னை நினைக்கும்போது ,
உனக்காக துடிப்பதற்கு இதயத்தை தராமலா போய்விடுவேன்?
என் பாதை உன் வழியில்,
தடை வந்தாலும் அழைத்து செல்வாய் எனும் நம்பிக்கையில் உன்னுடன் வருகிறேன்.
கடலின் ஆழம் போல் நம் நட்பின் ஆழமும்,
கடல் அலைபோல் நம் நினைவும் முடிவுறாமல் இருக்கவேண்டும்.
கவலை நமக்கு எதிரியாக வேண்டும்.அதனால் வரும் கண்ணீர் நமக்கு கற்பனை பொருளாக வேண்டும்.
நான் எப்போது இறப்பேன் என்று உனக்கு தெரியும்.
எப்போது நீ என்னை மறக்கிறயோ அன்று!
அதன்பிறகு உயிர் இருந்தாலும் நான் வெறும்கூடுதான்
என்றும் நினைத்திரு ! மறந்து விடாதே!
என்றும் மறவா
தோழன்
சிவா.R
Apr 8, 2010
வினோத் சுயசரிதை
நான் வினோத் .. என்னை மாமா என்று அழைப்பார்கள்.காரணம் அனைவரும் அறிந்ததே.எனது ஊர் சத்தியமங்கலம் அருகில் நால்ரோடு.என் பெற்றோருக்கு நான் ஒரே ஒரு பையன்.அதனால் நான் விடுதியில் இருந்து வாராவாரம் ஊருக்கு சென்றுவிடுவேன்.பேருந்தில் ஏறியசில நிமிடத்தில்சொர்க்கதிற்கே
(துக்கம்)சென்றுவிடுவேன்.. நான் அனைத்து தவறான பழக்கமும் கொண்டவன்.நான் கல்லூரியில் ஒரு பொண்ணை காதலித்தேன். ஆனால் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் எனக்கு தலைமுடி உதிர்தல்,தொப்பை நினைத்து மட்டும் வருந்துவேன்.என்னுடைய கையெழுத்து நன்றாக இருக்கும்.ஆனால் தலையெழுத்து???
என் தந்தை எனக்கு எவ்ளோ நாள்தான் தண்டசோறு போடுவர்.அளவுக்கு மீறி சரக்கு அடித்தால் வாந்தி எடுத்து மட்டி ஆகிவிடுவேன்.வண்டியிலிருந்து கீழே விழுந்தாலும் தூங்க விட்டார்கள் என்று அப்படியே படுத்துவிடுவேன்.ஒரு நாள் வெளியபோகவில்லை(பாத்ரூம்) என்று மாத்திரை போட்டு அப்புறம் போனேன்.எங்க அப்பா எல்லாமே வாங்கிதந்தாரு. ஆனால் இந்த மொபைல் மட்டும் புதுசு வாங்கித்தர மாட்டேன்கிறார்.இன்னும் கொஞ்ச நாளில் படிப்புமுடிய போகிறது.அப்புறம் எந்த இளிச்சவாயன் வேலை தருவான் என்று தெரியவில்லை.கிளாஸ் முடிந்த உடன் நான் ஜட்டி கிட்டி எல்லாத்தையும் அவுத்துவிட்டு கைலி மட்டும்தான்,ஏன்னா சூடு அப்படி...எங்க அப்பாவோட எங்கே போனாலும் அவர் பக்கத்துல போறது இல்லை.ஏன்னா அவர் என்னைவிட யூத்தா இருப்பாரு.. என்ன பண்ணுவது.....சட்டைய மட்டும் மாத்திபோட்டாலும்,பேண்ட மட்டும் மாத்த மாட்டேன்(தற்பொழுது மட்டும் ). ஓகே போதும் அப்புறம் மீட் பண்றேன்.
இப்படிக்கு என்றும்
மப்புடன்
S.வினோத்குமார்B.E
Mar 30, 2010
என் பார்வை நீ
Mar 26, 2010
தற்போதைய நட்பின் தேவை
நட்பு
உலகிலேயே மிகப்பெரிய உறவு ,வரம்,தன்னம்பிக்கை ,விட்டுகொடுத்தல், புரிந்துக்கொள்ளுதல் ..............
குரங்கு இனம் தன் நட்புக்காக எதிரியிடம் போர்புரியும்,உயிர் பிரியும்வரை கூட,,,,,,
அன்பை தவிர வேறு எதையும் எதிர்பார்க்காமல் பழகுவது நட்பு மட்டும்தான்..
.மாநிலத்தை விட்டு மாநிலத்திற்கே நட்பை ஒரு வெறுப்பாகதான் காட்டுகிறார்கள்..அப்புறம் எப்படி நாட்டுக்கு நாடு நட்பு வளரும்,,
கர்ணன் ,துரியோதனன் வாழ்ந்தது உண்மையோ ,பொய்யோ ஆனால் அவர்களின் நட்பை பற்றி புராணத்தில் படித்தால் நட்பு என்பது என்ன என்று புரியும் ,,
எவ்வளவோ அன்பான நண்பனாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலம் நாம் அவர்களை பிரிந்து இருக்கும் போது அவர்களின் மீதான அன்பு நம் மனதில் குறைந்துகொண்டு வருகிறது. காரணம் நமக்கு வேறு சில நண்பர்கள் கிடைத்துவிடுவதால் அவர்களோடு நேரத்தை செலவிடுகிறோம். என்றோ ஒரு நாள் அவர்களை பார்க்கும்பொழுது பழைய நினைவுகளை மட்டுமே பேசுவதில் நேரத்தை செலவிடுகிறோம்.
இந்த உலகில் நான் ஆசைபடுவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான் ,,காலத்தால் அழியாத சிறந்த நட்பை என் வாழ்நாளில் அதிகரித்து கொண்டே இருக்கவேண்டும்.. என் நினைவு அவர்களிடமும் ,அவர்கள் நினைவு என்னிடமும் அழியாமல் நினைத்து பார்த்துகொண்டே இருக்கவேண்டும்... நட்பு என்னும் உறவு நம் வாழ்வில் வந்துவிட்டால் வாழ்நாள் முழுதும் மறக்ககூடாது,,,
என்றும் நட்புடன்
சிவா.R
உலக வாழ்க்கை (மனிதனும்,இயற்கையும்)
இந்த உலகில் தற்பொழுது தன் வாழ்க்கையை முழுவதுமாக நிறைய பேருக்கு அனுபவிக்க தெரியவில்லை(என்னை உட்பட),,,,,
பல பேர் பணம்தான் வாழ்க்கை என்று வாழ்கிறார்கள். பணம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம்தான்,.ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது.பணம் என்பது நம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள மட்டுமே..
இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை தற்பொழுது வெறும் கற்பனையாகவே மட்டும் உள்ளது,,அந்த கால மனிதனின் கேற்கும்திறன்,பார்க்கும்திறன்,ஞாபகத்திறன் தற்பொழுது உள்ள மனிதனுக்கு குறைந்துகொண்டே வருகிறது,,
குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கும் மனிதர்களே தற்பொழுது நிறைய இருக்கிறார்கள், தற்பொழுது இந்த உலகம் மிக வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது ,, எப்பொழுது இந்த வேகம் முழுமையாக நிக்கும் என தெரியவில்லை.
இப்போதுஇந்த உலகை மனிதன்தான் ஆட்சி செய்கிறான்,பல இனங்களை வேறேடுத்தான்,பல மரங்களை பெயர்தெடுத்தான்....
நகரங்களில் மரங்கள்,செடிகள்,ஒரு அழகுபொருளாகவும்,அதிசயபொருளாகவும் பார்க்கபடுகிறது.மண்ணை பார்ப்பதற்கு முன் குப்பைதான் நம் கண்ணில் தெரிகிறது .
.நிறைய பேர் இளமை வயதில் சம்பாதிப்பது மட்டுமே குறியாக இருக்கிறார்கள் ,.முதுமை வயதில் வாழ்க்கையை அனுபவிக்க முயல்கிறார்கள்..ஆனால் வயது தடுக்கிறது.மனிதரே பணம் சம்பாரிப்பது மட்டும் அல்லாமல் ,
வாழ்க்கையை அனுபவித்து இயற்கையை காத்து வருங்கால தலைமுறையை வாழவைக்க நம்மால் முடிந்ததை உருவாக்கி வைத்து விட்டு செல்வோம்..

Mar 19, 2010
நட்பு
தரையில் மீன் துடிக்கும்போது அதை தண்ணீரில் விடும்போது அதற்கு ஏற்படும் நிலைதான் ,,,
எனக்கு நண்பர்களை பிரிந்து சந்திக்கும் போது ,,,,,
இந்த உறவை உயிரோடு ஒப்பிடுவேன் ,...
என் உயிர் இருக்கும்வரை இந்த உறவு நம்முள் நீடிக்கும் ,,
என் உயிர் பிரிந்த பிறகு இந்த உறவு உன்னுள் துடித்துகொண்டிருக்கும்,...
இந்த நிலையான அன்பை தந்த நண்பர்களுக்கு நன்றி ,,,,
இந்த உலகில் எவரை வேண்டுமானாலும் நண்பராக ஏற்றுக்கொள்ளமுடியும்...
மற்ற எந்த உறவாகவும் ஏற்று கொள்ளவே முடியாது ,,,
நட்பின் சிறப்புக்கு இது ஒன்றே போதும்,,,,
நட்பின் எண்ணம் உன் உள்ளத்தில் இருக்கும்வரை ,உன் எதிரியின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கும்,,,
உலகில் நீ சிறந்த மனிதனாக இருப்பதற்கு நல்ல நட்பை ஏற்றுக்கொள் ,,,,,
இப்படிக்கு உங்கள்
நண்பன்
சிவா.R
Mar 18, 2010
வெற்றியின் வீரம்
வெற்றி அதை அடைந்தவரின் செயலை பொறுத்தே நிர்ணயிக்கபடுகிறது,,,,
வெற்றி என்பது வெறும் வார்த்தை மட்டுமே,,,,
நியாயம் , அநியாயம் இரண்டுமே வெற்றியில் உண்டு......
வெற்றி பாதையில் நீ செல்லும்போது யாருக்கும் துன்பம் கொடுக்காதே ,,,
நீ பெற்ற வெற்றி உன்னைவிட மற்றவரை மகிழ்ச்சி படுத்த வேண்டும்,,
உன் எதிரியிடம் நீ கருணை காட்டுவதுகூட உன் வெற்றிதான் (உன் மனதுக்கு தெரியும்),,,,,,

சுமை
படகின் சுமையை கடல் தாங்குவதுபோல ,என் வாழ்வின் சுமையை என் தன்னம்பிக்கை சுமக்க வேண்டும் ..
படகில் சிறுதுளை விழுந்தால் அடைக்கும் சிறு மரக்கட்டையை போல விடாமுயற்சி என் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்...
நேர்மையுடன் என் வெற்றி எனக்கு மகிழ்ச்சி தரவேண்டும் ,,,,,,,
Subscribe to:
Posts (Atom)