Mar 26, 2010

தற்போதைய நட்பின் தேவை

நட்பு
 உலகிலேயே  மிகப்பெரிய உறவு ,வரம்,தன்னம்பிக்கை ,விட்டுகொடுத்தல்,  புரிந்துக்கொள்ளுதல் ..............


குரங்கு இனம் தன் நட்புக்காக எதிரியிடம் போர்புரியும்,உயிர் பிரியும்வரை கூட,,,,,,
அன்பை தவிர வேறு எதையும் எதிர்பார்க்காமல் பழகுவது நட்பு மட்டும்தான்..

அக்காலத்தில் உலகம் முழுவதும் நட்பை வளர்த்து கொள்ளுவது மிகவும் அரிது.(தொழில்நுட்ப வளர்ச்சி அப்படி),..... ஆனால் இக்காலத்தில் உலகில் எவருடன் வேண்டுமானாலும் நட்பை வளர்த்து கொள்ளமுடியும்,...ஆனால் இக்காலத்தில் நட்பு அதிகமானவரிடம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி விடுகிறது
.மாநிலத்தை விட்டு மாநிலத்திற்கே நட்பை ஒரு வெறுப்பாகதான் காட்டுகிறார்கள்..அப்புறம் எப்படி நாட்டுக்கு நாடு நட்பு வளரும்,,

கர்ணன் ,துரியோதனன் வாழ்ந்தது உண்மையோ ,பொய்யோ ஆனால் அவர்களின் நட்பை பற்றி புராணத்தில் படித்தால் நட்பு என்பது என்ன என்று புரியும் ,,

எவ்வளவோ அன்பான நண்பனாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலம் நாம் அவர்களை பிரிந்து இருக்கும் போது அவர்களின் மீதான அன்பு நம் மனதில் குறைந்துகொண்டு வருகிறது. காரணம் நமக்கு வேறு சில நண்பர்கள் கிடைத்துவிடுவதால் அவர்களோடு நேரத்தை செலவிடுகிறோம். என்றோ ஒரு நாள் அவர்களை பார்க்கும்பொழுது பழைய நினைவுகளை மட்டுமே பேசுவதில் நேரத்தை செலவிடுகிறோம்.


இந்த உலகில் நான் ஆசைபடுவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான் ,,காலத்தால் அழியாத சிறந்த நட்பை என் வாழ்நாளில் அதிகரித்து கொண்டே இருக்கவேண்டும்.. என் நினைவு அவர்களிடமும் ,அவர்கள் நினைவு என்னிடமும் அழியாமல் நினைத்து பார்த்துகொண்டே இருக்கவேண்டும்... நட்பு  என்னும் உறவு நம் வாழ்வில் வந்துவிட்டால்  வாழ்நாள் முழுதும் மறக்ககூடாது,,,

                                                                               என்றும் நட்புடன்
                                                                                              சிவா.R

1 comment:

  1. அந்தந்த கால கட்டங்களில் .......

    ReplyDelete