Mar 26, 2010

உலக வாழ்க்கை (மனிதனும்,இயற்கையும்)

இந்த உலகில் தற்பொழுது தன் வாழ்க்கையை முழுவதுமாக நிறைய பேருக்கு அனுபவிக்க தெரியவில்லை(என்னை உட்பட),,,,,      

 பல பேர் பணம்தான் வாழ்க்கை என்று வாழ்கிறார்கள். பணம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம்தான்,.ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது.பணம் என்பது நம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள மட்டுமே..

இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை தற்பொழுது வெறும் கற்பனையாகவே மட்டும் உள்ளது,,அந்த கால மனிதனின் கேற்கும்திறன்,பார்க்கும்திறன்,ஞாபகத்திறன் தற்பொழுது உள்ள மனிதனுக்கு குறைந்துகொண்டே வருகிறது,,


குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கும் மனிதர்களே தற்பொழுது நிறைய இருக்கிறார்கள், தற்பொழுது இந்த உலகம் மிக வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது ,, எப்பொழுது இந்த வேகம் முழுமையாக நிக்கும் என தெரியவில்லை.
இப்போதுஇந்த உலகை மனிதன்தான் ஆட்சி செய்கிறான்,பல இனங்களை வேறேடுத்தான்,பல மரங்களை பெயர்தெடுத்தான்....

நகரங்களில் மரங்கள்,செடிகள்,ஒரு அழகுபொருளாகவும்,அதிசயபொருளாகவும் பார்க்கபடுகிறது.மண்ணை பார்ப்பதற்கு முன் குப்பைதான் நம் கண்ணில் தெரிகிறது .

.நிறைய பேர் இளமை வயதில் சம்பாதிப்பது மட்டுமே குறியாக இருக்கிறார்கள் ,.முதுமை வயதில் வாழ்க்கையை அனுபவிக்க முயல்கிறார்கள்..ஆனால் வயது தடுக்கிறது.மனிதரே பணம் சம்பாரிப்பது மட்டும் அல்லாமல் ,

வாழ்க்கையை அனுபவித்து இயற்கையை காத்து வருங்கால தலைமுறையை வாழவைக்க நம்மால் முடிந்ததை உருவாக்கி வைத்து விட்டு செல்வோம்..

2 comments: